உள்நாட்டு செய்திகள்

சர்ச்சைக்குரிய சைட்டம் விவகாரம் – GMOA இனது இறுதித் தீர்மானம் இன்று…

சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தை தடைசெய்யுமாறு கோரி மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று(03) இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று கூடவுள்ள மருத்துவ சபை உயர்மட்ட குழுக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என சங்கத்தின் இணைப்பாளர் டாக்டர். நலிந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்காக இன்று முதல் நாடு முழுவதும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)

Related posts

சிவனொளிபாதமலை சென்று உயிரை விட்ட வௌிநாட்டவர்

Azeem Kilabdeen

மஹிந்தவிற்கு சேவையாற்றிய வைத்தியரும், தாதியும் மீள அழைப்பு

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை முயற்சி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்…

wpengine