உள்நாட்டு செய்திகள்

சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலையில், மற்றுமோர் சந்தேகநபர் கைது..

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தாக்குதலை மேற்கொள்ள வந்த வேனிற்கு வழிகாட்டுதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள உந்துருளியை செலுத்திய நபர் என சி.சி.டி.வி காணொளி பதிவுகள் மற்றும் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பலபிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவால் நேற்று(06) உந்துருளியுடன், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக களுத்துறை வடக்கு காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவர் பன்னிபிட்டிய பெலன்வத்தையிலும், ஹிக்கடுவ பிரதேசத்திலும் வசித்து வந்த 29 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று(07) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள குழுவின் தலைர் சமயங் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

தண்ணீர் கட்டணத்தினை செலுத்த விசேட அட்டை

wpengine

பிரதமர் பங்களாதேஷ் நோக்கி

wpengine

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்

News Editor