உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 போட்டியில் லசித் மாலிங்க ஹெட்ரிக் சாதனை..

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 2வது T20 போட்டியில் பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் தமது வெற்றி இழக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தடிய இலங்கை அணி 18 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

இதேவேளை, இந்த போட்டியில் லசித் மாலிங்க ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

இப் போட்டியின் 19 ஓவரை வீசிய மாலிங்க, முஷ்பிகுர் ரஹீம், மொட்டர்ஷா மற்றும் மெஹிதின் ஹசன் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இச் சாதனையைப் படைத்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அவர் பெற்றுக் 4 ஆவது ஹெட்ரிக் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=ruw-Mnd5EVg” width=”560″ height=”315″]

 

 

(rizmira)

Related posts

9 தடவைகள் தேசிய சாதனையை செய்தவர், டுபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்வதாக தகவல்..!

wpengine

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள்

wpengine

இனவாதத்தை தூண்டும் அரசியலை மக்கள் இனங்காண வேண்டும் – ரிஷாத்

wpengine