உள்நாட்டு செய்திகள்

தமிழீழ விடுதலை புலிகள் குறித்து அவதானம் தேவை – ஜி.எல்.பீரிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசு அக்கறை காட்ட வேண்டுமென  முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் அச்செவ்வியில் குறித்த அறிக்கையின் மிக முக்கியமான சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது; விடுதலைப் புலிகள் வட அமெரிக்கவில் சர்வதேச தொடர்புகள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களை பயன்படுத்துவதாகவும், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஆயுதங்கள், தகவல் தொடர்பு, நிதி, மற்றும் பிற தேவையான பொருட்கள் கொள்முதல் செய்து கொள்வதாகவும் குறித்த அறிக்கையின் முக்கிய கருத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வறிக்கை தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாட வேண்டும் எனவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ இராஜினாமா…

wpengine

ஜே.வி.பி பந்து வீச , நல்லாட்சி ஓங்கி 6 அடிக்கின்றது – மஹிந்த

wpengine

நெல் கொள்வனவு – களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை இன்று(17) முதல்…

wpengine