உள்நாட்டு செய்திகள்

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக, பல்கலைக்கழக நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கும் மாணவர்களுக்கு மஹபொல புலமை பரிசில் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறித்த இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மெஹான் டி சில்வா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த மூன்று மாத காலமாக பல்கலைக்கழக மாணவர்கள் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு உரிய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

கொச்சிக்கடை தேவாலய தற்கொலைதாரியின் சகோதரன் உட்பட 03 பேர் கைது…

wpengine

குறைந்த விலையில் ‘வர்ணத்’ தேங்காய் இன்று முதல் மக்களுக்கு..

wpengine

சபாநாயகர் தலைமையில் நிலையான அபிவிருத்தி இலக்கு தொடர்பில் இரு நாள் விசேட வேலைத்திட்டம்…

wpengine