உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு அமைச்சர் விஜயதாச விலகுவதாக எச்சரிக்கை..

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப் போவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டால் தாம், கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதவியில் சரத் பொன்சேகாவை அமர்த்தக் கூடாது எனவும் நெருக்கடியான தருணத்தில் தாம் கட்சியில் இணைந்து கொண்டு சேவையாற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் சரத் பொன்சேகாவிற்கும், விஜயதாச ராஜபக்ஷவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

அஞ்சல் மூல வாக்களிப்புக்காக 5 லட்சம் அரச பணியாளர்கள் தகுதி..

wpengine

இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen

நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜோன் கீ இலங்கை வருகை

wpengine