உள்நாட்டு செய்திகள்

சமூக வலைதளங்களில் சேறு பூசுதல் குறித்த அவமதிப்புகளுக்கு தராதரம் பார்க்காது தண்டனை – ஜனாதிபதி..

சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்படும் அவமதிப்பு குறித்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும் சட்டமொன்று அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தவறு யாரு செய்திருந்தாலும் தராதரம் பார்க்காது குறித்த தண்டனை வழங்கப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் குறித்த சட்டம் அமுலில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த இணையத்தள பகுதியினூடாக சேறு பூசுதல், அவமதித்தல், பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்தல் ஆகியவைக்கு குறித்த சட்டம் பொருந்தும் என கூறப்படுகின்றது.

சில அரச ஊடகங்களும் அரச கொள்கைகளுக்கு மாற்றமாக நடப்பதாகவும் அவை குறித்தும் அவதானம் செலுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

751 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக செலுத்த வேண்டியுள்ளது..!

wpengine

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு நேரத்தை நீடிக்க தீர்மானம்

wpengine

பொலிசாருக்கு பதவி உயர்வு

wpengine