உள்நாட்டு செய்திகள்

அவசர நிலைமைகளின் போது அழைக்க அவசர தொலைபேசி இலக்கம்..

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக களனி, களு, கிங் கங்கைகளின் நீர் மட்டங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த ஆற்றங்கரை தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக செயற்படும்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

களனி கங்கையின் க்ளேன் கோஸ் பிரதேசத்திலும், களு கங்கையின் இரத்தினபுரி பிரதேசத்திலும், கிங் கங்கையின் பத்தேகம பிரதேசத்திலும் நீர் மட்டங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளதாக குறித்த நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பிரதான பாதைகள் தொடர்பாக மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்ட மக்கள் மண்சரிவு தொடர்பாக எச்சரிக்கையாக செயற்படுமாறும், அவ்வாறான அவசர நிலைமைகளின் போது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த மேன்முறையீடு…

wpengine

திட்டமிட்டபடி நாளை(04) போராட்டம் முன்னெடுக்கப்படும் – கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம்

wpengine

விமல் வீரவன்ஸவின் சகோதரர் சரத் வீரவன்ஸ இன்று FCID இனால் கைது செய்யப்படலாம்..

wpengine