உள்நாட்டு செய்திகள்

களுத்துறையின் பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 9 பேர் பலி.. பலர் மாயம் – மீட்புப் பணிகள் தொடர்கிறது..

களுத்துறை, புளத்சிங்கள ,வெயங்கல்ல மற்றும் அகலவத்தை பகுதியில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக மாத்தறையில் தெனியாய – மொரவகந்த மற்றும் களுத்துறை – புளத்சிங்கள – போகஹவத்த – தெல்பாவத்த போன்ற பிரதேசங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனிடையே, இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அறிவிப்பு..!

wpengine

கெஹெலிய – ஜயம்பதி விடுதலை

wpengine

வெட் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று…

wpengine