உள்நாட்டு செய்திகள்

அனர்த்தத்தால் கடவுச் சீட்டுக்களை இழந்தோருக்கு மீளவும் கடவுச் சீட்டு..

அனர்த்தம் காரணமாக கடவுச் சீட்டுக்களை இழந்த பொது மக்கள் மீண்டும் கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியும் என உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, திருமண பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை இழந்த போதும், அவசரமாக கடவுச் சீட்டு தேவைப்படுமாயின் பொது மக்கள் பிரதேச செயலகத்தின் உதவியுடன் கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களே இவர்கள் என பிரதேச செயலகம் உறுதிப்படுத்தி கடிதம் ஒன்றை வழங்க வேண்டும்.

அதன் பின்னர், கடவுச் சீட்டு தேவைப்படுபவர்கள் கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)

Related posts

மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டார்: இந்திக்க அனுருத்த

wpengine

மதுபானத்தை விற்பனை செய்த உணவகத்திற்கு சீல்…

wpengine

சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான விசேட குழு இன்று(17) கூடுகிறது..

wpengine