உள்நாட்டு செய்திகள்

சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு..

சிறுநீரக நோயாளர்கள் தொடர்பில் அரசாங்கத்தால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார்.

தற்போது, அவர்களுக்கு 3000 ரூபா வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், இதனை மேலும் 2000 ரூபாவால் அதிகரிக்க ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

இதன்படி, மாதாந்தம் சிறுநீரக நோயாளர்களுக்கு 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள சுமார் 20,000 பேருக்கு அரசாங்கத்தால் இந்தக் கொடுப்பனவும் வழங்கப்படுவதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

அனைத்து அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் அதிகரிப்பு (தொகை இணைப்பு)

wpengine

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

wpengine

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி..

wpengine