உள்நாட்டு செய்திகள்

புகையிரத இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும்..

புகையிரத இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தினால் நேற்று(21) நள்ளிரவு ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

பணிக்கு இணைத்து கொள்ளும் பொறிமுறையை மறுசீரமைப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது போராட்டத்திற்கு ஏனைய சில சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக புகையிரத இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தின் உப தலைவர் பி ஏ டி பெரேரா தெரிவித்தார்.

எவ்வாறாயினும் புகையிரத இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தின் இந்த போராட்டத்தினால் புகையிரத போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொடவும் தெரிவித்தார்.

எனினும் தமது ஒத்துழைப்பின்றி புகையிரத சேவையில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்லவென புகையிரத இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தின் உபதலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(rizmira)

Related posts

உதயங்கவுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது….

wpengine

UPADTE – கடும் வாகன நெரிசல், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் வேண்டுகோள்..

wpengine

சமன் ரத்னப்ரிய பொலிஸ் தலைமையகத்தில்…

wpengine