உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் பிரச்சினையை முன்னிறுத்தி தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தில் வைத்தியர்கள்..

சைட்டம் பிரச்சினையை முன்னிறுத்தி எதிர்வரும் தினத்தில் தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டமொன்றில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் தினம் தொடர்பில் அந்த சங்கத்தின் செயற்குழு தீர்மானிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை ஆகியன தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் இன்று(29) இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே குறித்த இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மேலும் , அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் இந்த கூட்டத்தின் போது ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

சிறுநீரக மோசடி விவகாரம் – சந்தேக நபரொருவர் தப்பியோட்டம்

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் நாளை

wpengine

தாஜுதீன் கொலை உள்ளிட்ட 6 சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

wpengine