உள்நாட்டு செய்திகள்

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் திசாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்கவை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை(12) முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

கடந்த 2007 ம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்று(14) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

சாதாரணதர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம்

wpengine

மேலும் 461 பேருக்கு கொவிட் உறுதி

wpengine

20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கைவிட்டது அரசு..

wpengine