உள்நாட்டு செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிப்புடன் கடல் கொந்தளிக்கும் – வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்…

நாட்டை சுழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் நிலையில்,கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக மற்றும் காலியின் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 -70 Km இற்கும் இடையே அதிகரித்து வீசக்கூடும் என குறித்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

எனவே கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகங்களும் அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் கோரியுள்ளது.

இதேவேளை,இரத்தினபுரி,கேகாலை,கண்டி,காலி,மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 50mm இற்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பசில் ராஜபக்ஷவுடன் கைகோர்க்கிறது ‘ஜனதா சேவக பக்சய’…

wpengine

திலகரத்ன டில்ஷான் கிரிக்கெட் பயிற்சிவிப்பாளராக மிளிருவார் – அர்ஜுன

wpengine

ஏப்ரல் 21 : ஈராண்டுகள் பூர்த்தி

wpengine