உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை..

நாடாளாவிய ரீதியில் இன்றும்(10) பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி, காலி, மாத்தறை, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75mm இற்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என குறித்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மேற்குறித்த பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும்.

அதனுடன், மின்னல்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கோரியுள்ளது.

 

(rizmira)

Related posts

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்

wpengine

மக்கள் கொந்தளிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விளக்கமறியல் நீடிப்பு

wpengine