உள்நாட்டு செய்திகள்

சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி விவகாரத்தில் ரவி மட்டும் தொடர்புபடவில்லை – மஹிந்த..

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடியுடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மட்டும் தொடர்புபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகியமை வெறும் கண்துடைப்பு நாடகம் என குற்றம் சுமத்தியுள்ள அவர் மக்கள் நீதிமன்றிற்கு பதில் சொல்லாமல் எவராலும் ஒருபோதும் தப்பிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் நடக்கும் விடயங்களை மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றார்கள் என சுட்டிக்காட்டிய மஹிந்த மக்கள் தீர்மானம் எடுத்துள்ளனர் எனவும் அதன்படி நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 03 பேர் குணமடைந்தனர்

wpengine

தான் பதவி விலக மாட்டேன் – விஜேதாச ராஜபக்ஷ

wpengine