உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பந்துல குணவர்தனவிடம் எதிர்வரும் 25ஆம் திகதி CID விசாரணை…

குற்றப் புலனாய்வுப் பிரிவு எதிர்வரும் 25 ஆம் திகதி லொத்தர் சபை விவகாரம் தொடர்பில் தன்னிடம் விசாரணை நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“..குற்றப் புலனாய்வுப் பிரிவு என்னிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டு அதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டது. அதற்கிணங்க 14ம் திகதி காலை 7.30 மணிக்கு வந்து விசரணை நடத்துமாறு காலம் ஒதுக்கிக் கொடுத்தேன்.

எனினும் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அது தொடர்பில் சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டியுள்ளதனால் அவரிடம் அனுமதி பெற்று 16ம் திகதி விசாரணை நடத்துவதற்கு வருகை தருவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இருந்த போதிலும் கடந்த 15ம் திகதி எனது பாதுகாப்புத் தரப்பை தொடர்பு கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர், எதிர்வரும் 25 ஆம் தகிதி விசாரணை நடத்துவதற்கு வருகை தருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்..” என அவர் மேலும் தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

அகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை; சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர்..!

wpengine

தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை..

wpengine

உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது, தமது நோக்கமாகும் – ஜனாதிபதி

wpengine