உள்நாட்டு செய்திகள்

அளுத்கம கலவரம் – உயிரிழந்தோருக்கு தலா 2 மில்லியன் ரூபா நட்டஈடு..

கடந்த 2014ம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் ​போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(23) கொழும்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 05 இலட்சம் ரூபா வரையிலும் நட்ட ஈடு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

2014ம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் போது மூவர் பலியாகியும், 15 பேர் காயமடைந்தும், சுமார் 280 குடும்பங்கள் வரை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டும் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

 

 

(rizmira)

Related posts

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

wpengine

சுமார் 20 இலட்சம் பெறுமதியுடைய ஹெரோயினுடம் நபரொருவர் STF இனால் கைது

wpengine

உதயங்கவை இந்நாட்டிற்கு ஒப்படைப்பது குறித்து துபாய் அரசு மௌனம்…

wpengine