உள்நாட்டு செய்திகள்

நாளை மெதமுலனவில் மஹிந்தவின் விசேட சொற்பொழிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது குறித்து நாளை மெதமுலனவிற்கு சென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

இதன்படி, மாத்தறை தெவிநுவர உபுல்வன் தேவாலயத்திற்கு அருகாமையிலிருந்து லட்சக் கணக்கான மக்களின் பங்களிப்புடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனத் தொடரணியாக மஹிந்தவை பார்க்கச் செல்லவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“அமைதியாக இருந்தது போது நாடு படு குழியில் செல்வதனை தடுக்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என மக்கள் பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷவிடம் நாளை கோரிக்கை விடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பெரும்பாலும் நாளை மஹிந்த தீர்க்கமான முடிவினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Related posts

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் – 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்…

wpengine

எசல பெரஹெர ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஆரம்பம்

wpengine

ஶ்ரீலங்கன் தொடர்பில் கணக்காய்வாளரால் அறிக்கைகள் சமர்ப்பிப்பு…

wpengine