ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஊழல் மோசடியில் பதவி விலகிய ரவிக்கு அரசிடமிருந்து மற்றுமொரு விசேட பதவி..

ஊழல் மோசடியில் பதவி விலகிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு விசேட பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் இதுகுறித்து கூறுகையில்;

அலரி மாளிகையில் காரியாலயம் ஒன்றை அமைத்து ரவி கருணாநாயக்க அங்கு அமர்த்தப்பட்டுள்ளார். கிராமிய அபிவிருத்தி விவகாரம் தொடர்பிலான முக்கிய பதவியொன்று ரவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிராமிய மட்டத்திலான அபிவிருத்தி தொடர்பில் தங்களது யோசனைகளை முன்வைக்குமாறு ரவி கருணாநாயக்க 2017.08.22 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பதவியை இராஜினாமா செய்த ஒருவருக்கு இவ்வாறு அரசாங்கம் பதவி வழங்கியமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

(rizmira)

Related posts

இங்கிலாந்தின் மிரட்டல் மிக்க வீரர் மற்றும் இலங்கையின் பலம் குறித்து சங்கா கருத்து…

wpengine

ரணிலை வீழ்த்த சந்திரிக்கா சூழ்ச்சித் திட்டமாம் – மஹிந்தரின் கணிப்பு சரியாகும் இலக்கு

wpengine

ஜனாதிபதி புதல்வனின் எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம்.. (PHOTOS)

wpengine