உள்நாட்டு செய்திகள்

ரயன் ஜயலத்தை நாளை(31) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு..

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை நாளை(31) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் இன்று(30) உத்தரவிட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக புகுந்து அங்கிருந்த அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை காரணமாக, ரயன் ஜயலத் உட்பட 5 மாணவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் கடந்த 10 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

ரயன் ஜயலத் தனது சட்டத்தரணிகள் ஊடாக கடந்த 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

அசாத் சாலி கைது

wpengine

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்

wpengine

விமல் வீரவங்சவின் பிணை மனு மீளவும் ஒத்திவைப்பு…

wpengine