ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஆரம்பித்தது தேர்தல் வன்முறை : தலதாவின் ஆதரவாளர் வெட்டிக் கொலை

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  தலதா அத்துகோரளவின் ஆதரவாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

துஷார தேவாலேகம (வயது – 37) என்ற குறித்த நபர், இனந்தெரியாதோரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவமானது இரத்தினபுரி – தெய்யன்கேதால பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலதாவின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், தலதாவின் ஆதரவாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், கடும் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நகர மண்டபம் வரை பயணிகள் படகு சேவை…

wpengine

முதலிரவுக்காக அறையில் மணமகன் காத்திருக்க முன்னாள் காதலனுடன் தப்பிச் சென்ற மணமகள்

wpengine

எமது பிரதமர் தெட்டத் தெளிவாக பேசியிருப்பது மோடியின் காதுகளுக்கு கேட்கவில்லையா.. – ஷாஹித் அப்ரிடி பதிலடி…

wpengine