உலக செய்திகள்

இர்மா புயல் காரணமாக புளோரிடாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..

அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா’ புயல் பாதிப்பால் புளோரிடா மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை கடந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலின் தாக்கத்திலிருந்து கரீபியன் தீவுகள் இன்னும் மீளாத நிலையில் நேற்று(12) வரை அங்கு 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

புளோரிடா மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் சுமார் 6 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

Related posts

60 அமெரிக்க தூதரக அதிகாரிகளை நாட்டிலிருந்து வெளியேற்ற ரஷ்யா முடிவு…

wpengine

பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு…

wpengine

அமெரிக்காவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine