உலக செய்திகள்

வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக ஹோப் ஹிக்ஸ் நியமனம்..

வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக இருந்த அந்தோணி ஸ்காரமுச்சி 10 நாட்களில் பதவியை விட்டு விலகிய நிலையில் அப்பதவிக்கு ஹோப் ஹிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் டிரம்ப்பின் ஊடக செயலராக இதற்கு முன்னர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து வெள்ளை மாளிகையில் பல்வேறு நிலையிலான அதிகாரிகள் மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ஊடகப்பிரிவு அதிகாரியாக இருந்த சீஸ் ஸ்பைசர் இராஜினாமா செய்ததையடுத்து அந்த பொறுப்புக்கு சாரா நியமிக்கப்பட்டார்.

அதேவேளை, தகவல் இயக்குநர் பதவிக்கு அந்தோனி ஸ்காராமுச்சி என்பவரை டிரம்ப் நியமித்திருந்தார். அனால் இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே சீஸ் ஸ்பைசர் இராஜினாமா செய்தார்.

மேலும், வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளர் குறித்து அந்தோனி ஸ்காராமுச்சி கடுமையான கருத்துக்களை வெளியிட்டமையால் நியமிக்கப்பட்ட பத்தாவது நாட்களில் அந்தோனியை பதவியிலிருந்து விலக்க டிரம்ப் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தகவல் இயக்குநர் பொறுப்புக்கு ஹோப் ஹிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநர் பொறுப்புக்கு ஐந்தாவது நபராக ஹோப் ஹிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

11 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்…

wpengine

நரேந்திர மோடியின் திருகுதாளங்களை அம்பலமாக்கிய ஜாஹீர் நாயக்..!

wpengine

குழந்தைகள் தொழிற்சாலை முற்றுகை – இளம் பெண்கள் மீட்பு [VIDEO]

wpengine