கேளிக்கை

முதல் முறையாக கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் மகன் கவுதம் கார்த்திக்..

கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தில் அவரது தந்தையும், நடிகருமான ‘நவரச நாயகன்’ கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.

‘நான் சிகப்பு மனிதன்’ பட இயக்குனர் திரு இயக்கவிருக்கும் படத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

கார்த்திக் – கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கவிருக்கும் இப்படத்தில் அவர்களுடன் இரண்டு பிரபல கதாநாயகிகளும் மற்றும் பல பிரபல நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.

Related posts

Sachin A Billion Dreams திரைப்பட ப்ரீமியர் ஓர் பார்வை.. [PHOTOS]

wpengine

`Lipstick Under My Burkha`எனும் பிரபல படத்தின் தடை நீக்கம்.. [VIDEO]

wpengine

தர்பார் கொடுமையே கடைசியாக இருக்கட்டும்

wpengine