உள்நாட்டு செய்திகள்

தனியார் துறையிடம் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி…

தனியார் துறையிடம் இருந்து விரைவில் சுமார் 9 பில்லியன் ரூபாவிற்கு மின்சாரத்தை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சினால் இதற்கான யோசனை நேற்று(03) அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த இந்த அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக இவ்வாறு தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரம் பெறப்பட்ட போதும், தொடர்ந்தும் மின்சாரம் வழங்க குறித்த நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையிலேயே, 9 பில்லியன் ரூபாய்க்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மின்சாரத்துறை பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

LNG ஒப்பந்தத்தை எதிர்த்து SJB மனு

wpengine

ஐந்து மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்…

wpengine

அரசிடம் ஐ.தே.க கோரிக்கை

wpengine