விளையாட்டு

சென்னையில் இன்று ஹபீஸின் பந்து வீச்சு சோதனை

பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவர் முகமது ஹபீஸ். அவரது பந்துவீச்சு குறித்து தற்போது மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவரது பந்து வீச்சு பற்றி சர்ச்சை கிளப்பப்பட்டது. இதை தொடர்ந்து பந்து வீச்சு பரிசோதனைக்காக ஹபீஸ் இன்று சென்னை வருகிறார்.

போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் உள்ள ஐ.சி.சி.யின் பயோ மெட்ரிக் ஆய்வு மையத்தில் அவரது பந்து வீச்சு குறித்து பரிசோதனை நடக்கிறது.

இச்சோதனை முடிவில் அவரது பந்து வீச்சு சட்ட விரோதமாக இருந்தால் ஒரு ஆண்டுக்கு தடை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 240 ஓட்டங்கள் நிர்ணயம்

wpengine

அயர்லாந்து உடனான போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு…

wpengine

இங்கிலாந்துக்கு எதிரான ஓருநாள் போட்டித் தொடரிலிருந்து டில்சான் விலகல்

wpengine