உள்நாட்டு செய்திகள்

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் கணக்காய்வாளர் கைது…

பேராதனை பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப் படிப்பு நிறுவனத்தின் 7 கோடி ரூபாவை மோசடி செய்த முன்னாள் கணக்காய்வாளரை நேற்று(16) குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

வௌிநாட்டில் தலைமறைவாகியிருந்த அவர் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கணக்காய்வாளர் 2004 ஆம் ஆண்டு முதல் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பதாக குறித்த கணக்காய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததாகவும் உபவேந்தர் கூறினார்.

Related posts

எல்லை நிர்ணய மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் 27ம் திகதி..

wpengine

ஒட்சிசன் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீரின் உரை

wpengine