உள்நாட்டு செய்திகள்

திடீரென இலங்கைக்கு வருகை தந்த நைஜர் நாட்டு ஜனாதிபதி…

நைஜர் நாட்டு ஜனாதிபதி மொஹமட் இசோபு சுமார் இரண்டு மணி நேரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்து மீண்டும் பயணித்துள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேஷியாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் நைஜர் ஜனாதிபதியும் பயணித்த வேளையில் இன்று(17) அதிகாலை 3.20 அளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதோடு அதன் பின்னர் 5.40 அளவில் குறித்த அந்த விமானம் இந்தோனேஷியாவை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

நைஜர் நாட்டு ஜனாதிபதியுடன் அந்நாட்டு தூதுக் குழுவினர் 7 பேரும் விமானம் ஆயத்தமாகும் தருணத்தில் கட்டுநாயக்கவிலுள்ள ஓய்வறையில் தங்கியிருந்துள்ள நிலையில் அறிவித்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் அவர்கள் குறித்த விமானத்தில் இந்தோனேஷியாவுக்கு பயணத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

(rizmira)

Related posts

‘பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

wpengine

மேலும் 14 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

ஹம்பாந்தோட்டை தவிர மொனராகலை,மாத்தறை மாவட்டங்களிலும் சீனாவிற்கு காணி ஒதுக்கப்படும்..

wpengine