உள்நாட்டு செய்திகள்

பசில் ராஜபக்ஷவுடன் கைகோர்க்கிறது ‘ஜனதா சேவக பக்சய’…

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான சோமவன்ச அமரசிங்க, கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி நிலையையடுத்து அதிலிருந்து விலகி‘ஜனதா சேவக பக்சய’(மக்கள் சேவைக் கட்சி) எனும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார்.

எனினும், குறித்த இந்தக் கட்சி, அவரது மரணத்தையடுத்து தொய்வடைந்திருந்த நிலையில், பசில் ராஜபக்ஷ தலைமையில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்படப் பல முக்கியஸ்தர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இலங்கை பொதுமக்கள் முன்னணி என்ற கட்சியுடன் ஜனதா சேவக பக்சய இணைந்து கொண்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் திருப்தியாக நிறைவடைந்ததையடுத்தே குறித்த இந்த இணைப்பு இடம்பெற்றுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

வரவு செலவுத் திட்டம் மார்ச் 05ம் திகதி பாராளுமன்றுக்கு…

wpengine

பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் கோரிக்கை

wpengine

ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை வீச்சு.. (UPDATE)

wpengine