உள்நாட்டு செய்திகள்

நெடுநாளாக காத்திருந்து சுங்க துறையிடம் சிக்கிய சிப்பந்தி கைது..

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வர முற்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சிப்பந்தி ஒருவர் இன்று(19) காலை கைது செய்யப்பட்டார்.

ஜெத்தாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் பணிபுரிந்த 50 வயதுடைய இவர், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயற்சித்த நிலையில், வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனைகளின் போது இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத் துறையினர் அவரை முழுமையாகப் பரிசோதனை செய்தனர்.

அப்போது, இவரது உடலிலும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அங்கியிலும், காலில் அணிந்திருந்த விசேட பட்டியிலுமாக மொத்தமாகச் சுமார் 5 1/2Kg தங்க நகைகளை இவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட நகைகளின் பெறுமதி 2 1/2 கோடி ரூபாவுக்கும் அதிகம் என சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.

 

(rizmira)

Related posts

யாழ்ப்பாணம் தேவாலயத்திற்குள் புகுந்து பாதிரியாரின், கழுத்தில் கத்தி வைப்பு..!

wpengine

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக முன்னெடுப்பு…

wpengine

வெளிநாட்டு சிகரட்களுடன் பெண்ணொருவர் கைது…

wpengine