உள்நாட்டு செய்திகள்

பெயர் நீக்கம் குறித்து – இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம்..

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்க முயல்வதற்கு எதிராக இன்று(27) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பதாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

‘இந்தியவம்சாவளி மக்கள் நலன் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் அரும் பெரும் சேவையாற்றிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை குறிப்பாக பயிற்சி மையம் மற்றும் மண்டபங்கள், விளையாட்டு மைதானம் போன்றவற்றிலிருந்து நீக்க முயலும் வரலாற்று துரோகத்திற்கு எதிராக அதனை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம்..’ என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைநகர் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

ரயில்வே, தனியார் பஸ்கள் நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு

wpengine

வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை

wpengine

ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினி தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine