உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று…

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று(30) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விவாதம் எதிர்வரும் புதன் கிழமை வரையில் விவாதிக்கப்படவுள்ளது.

எனினும், குறித்த இந்த விவாதத்தின் இறுதியில் இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பு நடைபெறமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களினது நிலைப்பாடுகள், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலைப்பாடுகள் ஆகிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையினை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் http://www.constitutionalassembly.lk/ எனும் இணையத்தில் பார்வையிடலாம்.

 

(rizmira)

Related posts

பாடசாலை வேன்கள் மஞ்சள் நிறத்தில்

wpengine

சுவிஸ் தூதரக அதிகாரியை கைது செய்ய உத்தரவு

wpengine

ஹபராதுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…

wpengine