கேளிக்கை

நவம்பர் 12 இல் சமந்தா – சைதன்யா திருமண வரவேற்பு…

கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி, நடிகை சமந்தா – தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் கடந்த ஒக்டோபர் மாதம் 6 மற்றும் 7-ம் திகதிகளில் நடைபெற்றது.

தெலுங்கு திரையுலக நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள். கோவாவில் நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என 200 பேருக்கும் குறைவாகவே கலந்து கொண்டார்கள்.

ஒக்டோபர் 21-ம் திகதி சமந்தா – சைதன்யா இருவரும் நெருங்கிய நண்பர்களுக்கு சென்னை தாஜ் கோரமன்டல் ஹோட்டலில் விருந்து கொடுத்தனர். இந்த விருந்தில் ராணா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், சமந்தா – சைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 12-ம் திகதி ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட இந்திய சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர் நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த இருக்கிறார்கள்.

Related posts

விளம்பரத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா? – நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய ப்ரியா…

wpengine

காதலனுடன் சுவாதிக்கு டும் டும் டும்

wpengine

டி20 போட்டியில் ஜொலித்து இன்று திருமணத்தில் இணைந்த இந்திய வீரர் [PHOTOS]

wpengine