உலக செய்திகள்

சிகரெட் விற்பனைக்கு தடை…

இத்தாலியில் உள்ள வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை போப் ஆண்டவர் பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார்.

அங்கு தினமும் இலட்சக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புனித நகரமான வாடிகனில் மக்களின் உடல்நலம் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

சிகரெட் பிடிப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. மேலும் கடந்த 2015 ம் ஆண்டு வெளியான ஒரு புத்தகத்தில் வாடிகனில் ஆண்டொன்றுக்கு ரூ.72 கோடி மதிப்பிலான சிகரெட் விற்பனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதை கருத்தில் கொண்டு இத்தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் வாடிகனில் ஆண்டொன்றுக்கு ரூ.72 கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

wpengine

சிரியா ஜனாதிபதி தேர்தலில் ஆசாத் வெற்றி

wpengine

உலகளவில் 15 மில்லியன் பேருக்கு கொரோனா

wpengine