உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்கவிலிருந்து பயணித்த விமானம் சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறக்கம்…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 138 பயணிகளுடன் நேற்றிரவு (13) பயணத்தை ஆரம்பித்த விமானமொன்று இயந்திர கோளாறு காரணமாக சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மும்பை நகரை நோக்கி பயணித்த விமானமொன்றே மீள தரையிறக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 11. 30 இற்கு பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்திலிருந்த பயணிகள் மற்றுமொரு விமானத்தினூடாக இன்று(14) அதிகாலை மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.

Related posts

போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்களை கைது செய்யாமல், மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது..!

wpengine

அரசாங்க கொடியை துஷ்பிரயோகம் செய்தவரை கைது செய்ய நடவடிக்கை

wpengine

தான் பதவி விலக மாட்டேன் – விஜேதாச ராஜபக்ஷ

wpengine