உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலையினால் தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று..

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக நான்கு மாகாண பாடசாலைகளில் தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் இன்று(04) நடைபெறவுள்ளன.

கடந்த 30ம் திகதி மேல், மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நான்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கு கடந்த ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டது.

அன்றைய தினம் நடைபெறவிருந்த மூன்றாம் தவணை பரீட்சைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, இன்றைக்கான நேரசூசி நாளை(05) தொடக்கம் அமுலாக்கப்படும் என மேல்மாகாண தமிழ்க் கல்விப் பணிப்பாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

 

#reeshma..

Related posts

வெண்கலப் பதக்கத்தை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணித்த விதுஷா லக்ஷானி…

wpengine

நாளை(13) முதல் அனுராதபுர மாவட்டத்தின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

wpengine

அரச வைபவங்களுக்கு ஹோட்டல்களை உபயோகிக்க தடை..

wpengine