உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை எவரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்..

சீரற்ற காலநிலை காரணமாக குறிப்பாக நாளை(05) ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரை எவரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடா, மற்றும் நாட்டைச் அண்டியுள்ள கடல் பகுதிகளில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நாளை(05) முதல் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.

பொத்துவிலிலிருந்து காங்கேசன்துறை வரை திருகோணமலை ஊடான கடற்பரப்பில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் எனவும் குறித்த அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவைளை, வடக்கு – கிழக்கு கடல் பரப்பில் பொத்துவிலிலிருந்து புத்தளம் வரை திருகோணமலை ஊடாக, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஆகிய கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 30- 40Km வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதேவேளை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை கடல்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55Km வேகத்திற்கும் அதிகமாக காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 70 – 80 Km வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

#reeshma

Related posts

இலங்கை அணியினை முதல் போட்டியிலேயே வீழ்த்தியது ஆஸி அணியினர்..

wpengine

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய 45 பேருக்கு பதவியுயர்வு.

wpengine

200 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

wpengine