வாழ்க்கை

ஆலிவ் எண்ணெய் + எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றம்…

இன்றைய காலங்களில் துரித உணவுகளின் மீது ஈடுபாடு இருக்கும் அதே அளவு இயற்கை உணவுகளையும், இயற்கை மருந்துகளின் மீதும் அக்கறை மற்றும் ஈடுபாடு வந்துள்ளது.

உடல் நலத்தின் மீது அக்கறை இருப்பவர்கள் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு முதலில் இயற்கை மருந்துகளை தேர்வு செய்து அதனால் குணமாகவில்லையென்றால் பிறகு அலோபதியை தேடுவது நலம். . ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உங்கள் உடலில் பல அருமையான மாற்றங்கள் நடை பெறும். அவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

தேவையானவை :
1/ 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு.
தயாரிக்கும் முறை : அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்து அதில் பிழிந்த எலுமிச்சை சாறு அரை ஸ்பூன் கலக்குங்கள். அரை ஸ்பூன் அளவு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு போதும். அதற்கு மேல் எடுக்க வேண்டாம்.

பயன்படுத்தும் முறை :
இந்த சாற்றினை உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் சாப்பிட வேண்டும். வாரம் 3 நாட்கள் அல்லது வாரம் ஒரு தடவை எடுத்துக் கொண்டால் போதும். இப்படி குடிப்பதால் பலவித நன்மைகளை நமக்கு தருகின்றது. அவற்றப் பற்றி பார்க்கலாம்.

மலச்சிக்கலை குணப்படுத்தும் :
நீங்கள் மலச்சிக்கலில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தால், இதனை குடிக்கும்போது, இதிலுள்ள ஆலிவ் எண்ணெய் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. மலமிலக்கியாகவும் செயல்படுகிறது. எலுமிச்சை சாறு நச்சுக்களை அழித்து சுத்தம் செய்கிறது. இதனால் மலச்சிக்கலிலிருந்து வேகமாக குணமடைவீர்கள்.

கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும் :
ஆலிவ் எண்ணெயில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் விகிதத்தை சீர்படுத்துகிறது. கெட்ட கொழுப்பை குறைத்து செரிமானத்திற்குட்படுத்துகிறது.

என்றும் இளமை :
ஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் சி, போன்றவை சுருக்கங்கள் இல்லாமல் இருப்பதற்கு அவசியம். அவ்வாறு என்றும் இளமையாக இருப்பதை இந்த மேஜிக் சாறு வழங்குகிறது. இதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் விட்டமின் சி உங்களை வசீகரமாக வைத்துக் கொள்ளும் :

நகம், கூந்தல் மற்றும் சருமம் :
உங்களை அழகாக வைத்துக் கொள்வதில் விருப்பமென்றால் இந்த சாறு அருமையான பலனை உங்களுக்கு தரும். இந்த கலவையின் ஸ்பெஷல் என்னவென்றால் இதனை குடிக்கவும் செய்யலாம் .சருமம் மற்றும் கூந்தலுக்கு தடவவும் செய்யலாம். இது ஆரோக்கியமான நகம் சருமம், மற்றும் கூந்தலை வளரச் செய்கின்றது

எச்சரிக்கை :
உங்களுக்கு பித்தப்பை கற்கள் இருந்தால் இதனை குடிக்க வேண்டாம். இது வயிற்று வலியை உண்டாக்கிவிடும். ஆகவே பித்தப்பை கற்கள் இருப்பவர்கள் இதனைமுயற்சிக்க வேண்டாம்.

Related posts

முகத்திற்கு பொலிவு தரும் ஆரஞ்சு தோல்…

wpengine

ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு போதும் உங்கள் சருமம் பிரகாசமடையும்….

wpengine

சமூக வலைத்தளங்களுக்கு அடிமை : 400 மில்லியன் மக்கள் அவதி

wpengine