உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ்வரன் உட்பட நால்வர் கைது…

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் வெள்ளையன் திணேஸ், மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் நால்வரை இன்று(11) காலை கைது செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் மரண வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையொருவர் காயமுற்றார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் இன்று(11) ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்

Related posts

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக ரிஷாட் பதியுதீன்…

wpengine

வறுமை ஒழிப்பு அபிவிருத்திக்கு குழுவொன்று உருவாக்கம்

wpengine

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

wpengine