உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில்வே தொழிற்சங்கம் மற்றும் அமைச்சரவை துணைக்குழுவுக்கும் இடையிலான இணக்கப்பாடு..

ரயில்வே தொழிற்சங்கங்களது பணிப்புறக்கணிப்பு இன்று(13) முற்பகல் ரயில்வே தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், அமைச்சரவை துணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது. இதன் போது ரயில்வே வேலைநிறுத்தம் தொடர்பாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்த விடயம் பற்றி அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன விபரித்தார்.

கல்வி, சுகாதாரம், ரயில்வே திணைக்களங்கள் உள்ளிட்டவை வரையறுக்கப்பட்ட சேவைக்குள் (closed service) உள்வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். வரையறுக்கப்பட்ட சேவைக்குள் உள்வாங்கி தற்சமயம் நிலவும் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதென முடிவு செய்யப்பட்டது. இதற்கு ரயில்வே தொழிற்சங்க அமைப்புக்களும் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

 

#reeshmaa

Related posts

சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை விளக்கமறியலில்…

wpengine

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியின் 2ஆம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல்…

wpengine

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி

wpengine