உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமையாக c2 s..

மருத்துவ கற்கைகளுக்கு ஆகக் குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. குறித்த இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமாதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

குறித்த கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்த நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடவிதானங்களில் ஆகக் குறைந்தது Credit Passes(C) சித்திகள் இரண்டினையும் Simple Passes(S) ஒன்றினையும் ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஆகக் குறைந்த தகைமைகள் என அமைச்சரவை அங்கீகரித்தது.

இதனடிப்படையில் இலங்கை மருத்துவ கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தினை வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

#reeshmaaa..

Related posts

இன்று(01) முதல் நாடளாவிய ரீதியில் விஷேட சோதனை நடவடிக்கை…

wpengine

ரயன் மற்றும் பபசர’வுக்கு பிடியாணை…

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

wpengine