உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம்…

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் ஜனவரி 11ஆம் திகதி முதல் தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அனுப்பி வைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

தபால் மூலமாக வாக்களிப்பவர்களிடத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பங்களை பரிசீலனைக்கு உட்படுத்தி எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளது.

இதனையடுத்து ஜனவரி மாதம் 11ஆம் திகதி குறித்த வாக்காளர் இடாப்பில் உள்ள அனைத்து தபால் மூல வாக்காளர்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அனைத்தும் தபால் அலுவலகங் களில் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தபால் மூலமாக வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் அனைவரும் 25ஆம், 26ஆம் திகதிகளில் தமது அலுவலகங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருக்கும். இதன்போது தேர்தல் திணைக்கள அதிகாரிகளும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும், பொலிஸார், படையினர் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபடவுள்ளனர். ஆகவே இத்தகைய பணிகளில் ஈடுபடுபவர்கள் 22 ஆம் திகதி தபால்மூலமாக தமது வாக்குகளை அளிக்க முடியும் என்றார்.

####

Related posts

பெரும்பாலான பகுகளில் இன்றும் மழை

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியினரின் கட்சி ஊழியர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி பிலிமத்தலாவையில்..

wpengine

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine