உள்நாட்டு செய்திகள்

யாழ்.பல்கலையின் கலைப்பீட விரிவுரைகள் நாளை மீள ஆரம்பம்..

யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட விரிவுரைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கலைபீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்காக விதிக்கப்பட்ட பொதுவான தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை(18) அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் எனவும், யாழ் பல்கலைக்கழக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த கலைப்பீடத்தின் ஏனைய பிரிவுகளின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கடந்த வாரம் வகுப்புத்தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

#reeshma..

Related posts

8-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவில்..

wpengine

அமெரிக்க பயண எச்சரிக்கைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine

ஜனாதிபதி தேர்தல் – ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவின் அறிக்கை

wpengine