உள்நாட்டு செய்திகள்

ஒருநாள் சேவையில் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்…

ஒருநாள் சேவையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கான அடையாள அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பெருமளவானோர் இன்று(17) ஆட்பதிவு திணைக்களத்துக்கு சென்றுள்ளனர்.

எனினும், திணைக்கள சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரி ஒருவர், ஒருநாள் சேவையில் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகளை முன்னெடுக்கும் பல இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் குறித்த நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

#reeshma

Related posts

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிணை

wpengine

இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது

wpengine

புதிய கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்…

wpengine