உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் சரத்திற்கு எதிராக சட்டமா அதிபரால் 02 வழக்குகள் தாக்கல்…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் முதல் இரண்டு வழக்குகள் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, சட்டமா அதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றில் நேற்று(25) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு வாவி அபிவிருத்திக்காக திறைசேரியிலிருந்து வழங்கப்பட்ட சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தினை முறைகேடாக பாவித்து, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ அவர்களது இறுதி தேர்தல் கூட்டத்தினை நீர்கொழும்பு நகர சபை மைதானத்தில் நடத்தியமைக்கு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் பணத்தினை முறைகேடாக பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தினக் குறிப்பு அச்சிட்டமை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே சட்டமா அதிபரால் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

#rishma

Related posts

இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவின் பதவிக் காலம் நீடிப்பு…

wpengine

கோல் மண்டலம் நாளை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறப்பு…

wpengine

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine