உள்நாட்டு செய்திகள்

பிணை முறி தொடர்பிலான விவாதத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பங்குபெறாது…

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பிலான விவாதம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றில் நடைபெற்றால் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை அதற்கு தயார் நிலையில் இருப்பினும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை அந்நாளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவு என தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி 07ம் திகதி தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவுக்கு வருவதால் அதற்கு முன்னதாக குறித்த விவாதம் நடாத்தப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கருத்து வெளியிட்டுள்ளது.

அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது குறித்து தெரிவிக்கையில், தேர்தல் காலமாகையால் 08ம் திகதிக்கு பாராளுமன்றிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை வருமாறு அழைப்பது சாத்தியமாகாது என தெரிவித்துள்ளது.

 

#rishma

Related posts

முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுக்கு மீண்டும் திறந்த பிடியாணை…

wpengine

மலையக புகையிரத பாதையில் ஏற்பட்ட தாழிறக்கத்தினால் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்.

wpengine

கோட்டாபய நாடு திரும்பினால் பாதுகாப்பு வசதி செய்துகொடுக்கப்படும் – பிரதமர்

wpengine