உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாளை காலை 08 மணி முதல் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க தவறிய நிலையில் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தயாராகி வருகின்றது.

நாளை(30) காலை 08 மணி முதல் நாடளாவிய ரீதியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், பல சந்தர்ப்பங்களில் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியிருந்த போதிலும் அரசாங்கம் அதற்கு உரிய பதிலை இதுவரை வழங்காததன் காரணமாகவே குறித்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 

#rishma

 

Related posts

ஆட்டநிர்ணயம், ஊழல் – மோசடி, குற்றங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைப் பிரிவு

wpengine

இலங்.ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவை தனியார் துறையிடம்…

wpengine

விமானங்கள் தரையிறங்களில் மாற்றங்கள்..

wpengine