உள்நாட்டு செய்திகள்

காலநிலையில் திடீர் மாற்றம்…

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மழையுடனும், மேகமூட்டத்துடனும் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(30) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் அனேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும், விசேடமாக கிழக்கு – ஊவா மாகாணங்களிலும், மாத்தளை – பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் எனவும், வடக்கிலும், அம்பாந்தோட்டை- மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவால் அதிகரிப்பு..!

wpengine

அருங்காட்சியகங்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும்

wpengine

கொழும்பில் கடும் வாகன நெரிசல்

wpengine